மைசூரில் 2018 டிசம்பர் 17 முதல் 20 வரை நடைபெற்ற, 9வது அகில இந்திய மாநாடு புதிய உற்சாகத்துடனும், மகிழ்வுடனும் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தோழர் அனிமேஷ் மித்ரா (மேற்கு வங்கம்) தலைவராகவும், தோழர் P . அபிமன்யூ, (தமிழ் மாநிலம்) பொது செயலராகவும், தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி (வட கிழக்கு 1), துணை பொது செயலராகவும், தோழர் கோகுல் போரா (அஸ்ஸாம்) பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
நமது மாநிலத்தை சேர்ந்த தோழர் மீண்டும் பொது செயலராக தேர்வு செய்யப்பட்டது போல், நமது மாநில தலைவர் தோழர் S . செல்லப்பா, உதவி பொது செயலராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனைத்து புதிய நிர்வாகிகளுக்கும் தர்மபுரி மாவட்ட சங்கம் சார்பாக தோழமை வாழ்த்துக்கள்.