Monday, December 31, 2018
Saturday, December 22, 2018
9வது அகில இந்திய மாநாடு - புதிய நிர்வாகிகள்
மைசூரில் 2018 டிசம்பர் 17 முதல் 20 வரை நடைபெற்ற, 9வது அகில இந்திய மாநாடு புதிய உற்சாகத்துடனும், மகிழ்வுடனும் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தோழர் அனிமேஷ் மித்ரா (மேற்கு வங்கம்) தலைவராகவும், தோழர் P . அபிமன்யூ, (தமிழ் மாநிலம்) பொது செயலராகவும், தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி (வட கிழக்கு 1), துணை பொது செயலராகவும், தோழர் கோகுல் போரா (அஸ்ஸாம்) பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
நமது மாநிலத்தை சேர்ந்த தோழர் மீண்டும் பொது செயலராக தேர்வு செய்யப்பட்டது போல், நமது மாநில தலைவர் தோழர் S . செல்லப்பா, உதவி பொது செயலராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனைத்து புதிய நிர்வாகிகளுக்கும் தர்மபுரி மாவட்ட சங்கம் சார்பாக தோழமை வாழ்த்துக்கள்.
Tuesday, December 18, 2018
2019 விடுமுறை தினங்கள் பட்டியல்
2019ம் வருடத்தில் நமது அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய விடுமுறை தினங்கள், RH தினங்கள் பட்டியலை தமிழ் மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தோழர்கள் கவனத்தில் கொள்ளவும்.
தோழமையுடன்,
மாவட்ட செயலர்
தோழமையுடன்,
மாவட்ட செயலர்
Sunday, November 18, 2018
கால வரையற்ற வேலைநிறுத்தம் - அறிவிப்பு கொடுக்கப்பட்டது
03.12.2018 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான வேலை நிறுத்த அறிவிப்பை, AUAB தலைவர்கள் இன்று (16.11.2018) BSNL CMDயிடம் நேரில் வழங்கினர்.
போராட்ட பிரகடனம் காண இங்கே சொடுக்கவும்
போராட்ட பிரகடனம் காண இங்கே சொடுக்கவும்
Thursday, November 15, 2018
03-12-2018 முதல் காலா வரையற்ற வேலை நிறுத்தம் -AUAB அறைகூவல்
அன்பார்ந்த தோழர்களே,
14.11.2018 அன்று புது டெல்லியில் கூடிய AUAB கூட்டத்தில் ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் இதர பிரச்சனைகளை நிறைவேற்றக் கோரி 03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல 03.12.2018 முதல் அரசின் திட்டங்களான NOFN, NFS மற்றும் LWE ஆகிய திட்டங்களையும் புறக்கணிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நமது நியாயமான உரிமையான ஊதிய மாற்றத்தை வென்றடையவும், உயிரினும் இனிய BSNL நிறுவனத்தை பாதுகாப்பதற்கும் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராவோம். 03.12.2018லிருந்து கால வரையற்ற வேலைநிறுத்தம். இது ஒன்றே நமது; கோரிக்கைகளை வென்றடையச் செய்யும்.
நமது ஒன்றுபட்ட சக்தியினை அரசுக்கு உணர வைப்போம். நமது கோரிக்கையினை வென்றடைவோம்.

நாடு தழுவிய மாபெரும் பேரணி 14-11-2018
DoT கிட்டத்தட்ட நமது அனைத்து கோரிக்கைகளையும் திருப்பி அனுப்பிவிட்டது...
நமது உரிமையான ஊதிய மாற்றத்தை தாமதப்படுத்தும் DoTயை கண்டித்து நடைபெற்ற மாபெரும் பேரணியில் சில காட்சிகள்
Subscribe to:
Posts (Atom)