திரு. J.S .தீபக் அவர்கள் தொலைத்தொடர்பு செயலராக 2016 ஜனவரி முதல் உள்ளார். 02.03.2017 அன்று மத்திய அரசு அவரை வணிக துறைக்கு சிறப்பு அதிகாரியாக அதிரடியாக மாற்றியது. மேலும், 01.06.2017 முதல் WTO அமைப்பிற்கான, இந்திய "நிலைதூதராக" பொறுப்பேற்பார் எனவும் அறிவித்துள்ளது. திரு. தீபக் தற்போது, பார்சிலோனா நாட்டில், உலக தொலைத்தொடர்பு மாநாட்டில் உள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து இலவச சேவைகள் வழங்கியதை திரு. தீபக் கேள்வி எழுப்பினார். இது மத்திய அரசாங்கத்தையும், ரிலையன்ஸ் நிறுவனத்தையும் எரிச்சல் படுத்தியது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொள்ளாததே, இந்த மரியாதையற்ற மாறுதலுக்கு காரணம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் உள்ள நெருக்கத்தையே இந்த மாறுதல் காட்டுகிறது.
திரு. தீபக் BSNL நிறுவனத்துக்கு ஆதரவான அதிகாரி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
திரு. தீபக் BSNL நிறுவனத்துக்கு ஆதரவான அதிகாரி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தகவல்: மத்திய சங்க இணையம்.