BSNL ஊழியர் சங்கத்தின் 8வது தமிழ் மாநில மாநாடு ஈரோட்டில் 2017, மே மாதம் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ள சார்பாளர்களை கிளைச் சங்கங்கள் உடனடியாக கூடி முடிவு செய்ய வேண்டும். இந்த மாநில மாநாட்டிற்காக அனைத்து மாவட்ட சங்கங்களுக்கும் நிதிக் கோட்டா போடப்பட்டுள்ளது. இதனை ஏப்ரல் முதல் வாரத்தில் முடிப்பது என்பது நமதுதமிழ் மாநில செயற்குழுவின் முடிவு. இதனை மாவட்ட செயலாளர்கள் நிறைவேற்றிட வேண்டும். மாநில சங்க நிர்வாகிகள் இதற்கான உதவியினை மாவட்ட சங்கங்களுக்கு செய்திட வேண்டும். இந்த மாநில மாநாட்டில் முன்வைக்க உள்ள அறிக்கையினை இறுதி செய்வதற்கான தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் 02.05.2017 அன்று நடைபெற உள்ளது. விடுமுறைக்காலம் என்பதால் தோழர்கள் முன்கூட்டியே பயணத்திற்கு ஏற்பாடு செய்து கொள்ளவேண்டுமென மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது. முறையான அறிவிப்பு இன்னமும் சில தினங்களில் வெளியிடப்படும்.