தர்மபுரி MTX கிளையில், நீண்ட நாட்களாக தேங்கியுள்ள ஊழியர் பிரச்னைகளை தீர்வு காண தல மட்ட நிர்வாகத்திடம், கிளை சங்கம் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியது. சேவை மேம்பாடு சம்மந்தமாக, நமது கிளை சங்கம் கொடுக்கும் ஆலோசனைகளையும், தல மட்ட நிர்வாகம் புறக்கணித்தது. சேவை குறைபாடு அதிகம் காணப்பட்ட சூழலில், மாவட்ட சங்க வழிகாட்டுதல்படி, தல மட்ட போராட்டத்தில் ஈடு பட கிளை சங்கம் முடிவு செய்தது.
அதன்படி, இன்று, 21.08.2017 தர்மபுரி MTX தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தோழர் C . செல்வராஜ் கிளை தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தோழர் D. பாஸ்கரன், TNTCWU மாவட்ட தலைவர் தோழர் P. கஜபதி, BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் K . பன்னீர் செல்வம், BSNLEU MTX கிளை செயலர் தோழர் C . பொன்ராஜ், ஆகியோர் விளக்கவுரை வழங்கினார்கள்.
மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணன், கண்டன பேருரை வழங்கினார்.
கிளை உதவி தலைவர் தோழர் R . மாது, ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்ப, கிளை உதவி செயலர் தோழர் K. ராஜா நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். MTX கிளை தோழர்கள் போராட்டத்தில், திரளாக கலந்து கொண்டனர். கோரிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால் போராட்டத்தை தீவர படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
P . கிருஷ்ணன்,
மாவட்ட செயலர்