Wednesday, October 4, 2017

டிசம்பர் மாதம் இரண்டு நாள் வேலைநிறுத்தம்

Image result for strike posters



சிறப்பான ஊதிய ஒப்பந்தம் / துணை டவர் அமைக்கும் முயற்சியை தடுத்திட இன்று டெல்லியில் அனைத்து சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, AIGETOA, SEWABSNL, BSNLMS, BSNLOA, ATM மற்றும்  TOABSNL சங்க தலைவர்கள்/பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது. 

01. " All Unions and Associations of BSNL" என்ற புதிய பெயரில், ஒரே பதாகையின் கீழ், இனி இந்த அமைப்பு செயல்படும்.  

02. அமைப்பில் உள்ள அனைத்து பொது செயலர்களும் கையொப்பமிட்ட பின், நிர்வாகத்திற்கும், அரசாங்கத்திற்கும்  கூட்டாக மகஜர் வழங்கப்பட்டு போராட்ட அறைகூவல் தெரிவிக்கப்படும். 

03. சிறப்பான ஊதிய மாற்றத்தை, 01.01.2017 முதல் பெறவும், இரண்டாவது ஊதிய குழுவில் தீர்வு எட்டப்படாத பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தியும், நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் பெற்றிடவும், துணை டவர் அமைக்கும் முயற்சியை தடுக்கவும் கீழ்கண்ட, இயக்கங்கள் கூட்டாக நடத்தப்படும். 

அ. 16.10.2017 அன்று அனைத்து இடங்களிலும்  ஆர்ப்பாட்டம்.

ஆ. 15.11.2017 க்குள் பாராளமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மகஜர் வழங்குவது.

இ. 16.11.2017 அன்று அனைத்து மட்டத்திலும் "மனித சங்கிலி போராட்டம்".

ஈ . 2017 டிசம்பர் 12 மற்றும் 13 "இரண்டு நாள் வேலைநிறுத்தம்".

உ. அதன்பின்பும் பிரச்சனைகள் தீரவில்லை என்றால், "காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்" ஈடுபடுவது. தேதி பின்னர் முடிவு செய்யப்படும். 

அடுத்த கூட்டம் 23.10.2017 அன்று நடைபெறும். அனைத்து சங்கங்களும், அமைப்புகளும் ஒன்று பட்டு முடிவுகள்  எடுத்திருப்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். நிச்சயம் கோரிக்கைகள் வெற்றி பெறும் என ஆர்ப்பரித்து போராட உடனடியாக தயாராகுவோம்.  

போராட்ட வாழ்த்துக்களுடன்,
P . கிருஷ்ணன் ,
மாவட்ட செயலர்