தொலைதொடர்புதுறையில்உள்ள டவர்களை தனியாருக்குவிடும் முயற்சியை கைவிடவேண்டும்.3,வது ஊதியமாற்றம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொலைதொடர்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
அதிகாரிகள் சங்க மாவட்டசெயலாளர் பி.மகேஸ்குமார் தலைமைவகித்தார்.போராட்டகுழு கன்வினர் பி.கிருஷ்ணன் வரவேற்றார்.தொலைதொடர்பு ஊழியர் சங்கக மாநில உதவிசெயலாளர் எம்.பாபு,என்.எப்.டி மாநில உதவிசெயலாளர் சென்னகேசவன்,கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர்கள் ஊமை.ஜெயராமன்,இளந்திரையன்,அம்மாசி,கே.மணி,பிரபாகரன், உள்ளிட்ட பலர்பேசினர்.