Tuesday, April 5, 2016

விரிவடைந்த மாவட்ட செயற்குழு 4/4/2016

விரிவடைந்த மாவட்ட செயற்குழு 4/4/2016 அன்று ரோட்டரி ஹால் தர்மபுரியில் காலை 10:30 மணியளவில் மாவட்ட தலைவர் D.பாஸ்கரன் தலைமையில் தொடங்கியது. மூத்த தோழர்கள் தேசிய கொடி மற்றும் சங்க கொடி ஏற்றி துவக்கி வைத்தனர். மாவட்ட செயலர் P.கிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட உதவி தலைவர் P.அழகிரிசாமி, மாநில அமைப்பு செயலர் தோழர் M .பாபு, முன்னால் மாநில உதவி செயலர் தோழர் M.நாராயணசாமி மற்றும் நமது மாவட்ட ஒப்பந்த உழியர் சங்க தலைவர் தோழர் P.கஜபதி ஆகியோர் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து நமது மாநில செயலர் தோழர் M.பாபுராதாகிருஷ்ணன் மற்றும் அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் S.செல்லப்பா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.