Wednesday, February 22, 2017

கூடுதல் நேரம் உழைப்போம்

do more work க்கான பட முடிவு


06/02/2017 அன்று அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. NFTEBSNL பொது செயலர் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில், நமது பொதுச்செயலர் தோழர்.அபிமன்யூ, BSNL எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து விளக்கவுரையாற்றினார். 

கூட்டத்தில், கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. 

முடிவுற இருக்கும் நிதியாண்டில், BSNLன் வருவாயை மேம்படுத்தும் பொருட்டு, அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும்,தினமும், கூடுதலாக ஒரு மணி நேரம் பணி செய்து, விற்பனையை அதிகரித்து சேவையை மேம்படுத்துவது என்பது ஒரு முக்கியமான முடிவாகும். 

[10/02/2017 முதல் 31/03/2017 வரை கூடுதலாக ஒரு மணி நேரம் பணி செய்ய வேண்டும்.] 

கூட்டத்தில் போராட்ட இயக்கங்களும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 09.03.2017 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, பேரணி செல்ல வேண்டும்.  

* BSNL  நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்கும் பிரதமர் அலுவலகத்தின் முயற்சியைக் கைவிடு!

* செல் கோபுரங்களைப்பிரித்து  துணை நிறுவனம் அமைக்கும் முயற்சியைக் கைவிடு!

*4G அலைக்கற்றையை BSNLக்கு இலவசமாக வழங்கு!

*Reliance Jio நிறுவனத்திற்கு சலுகைகள் காட்டும் அவலத்தை நிறுத்து!

BSNL நிறுவனத்தை காக்க, மேற்கண்ட இரண்டு இயக்கங்களையும் வெற்றிகரமாக்குவோம்! BSNL ஐ காப்போம்!

தோழமையுடன்,
                                                      P .கிருஷ்ணன் 
மாவட்ட செயலர்