6.05.2014 அன்று மாலை 5.20 மணிக்கு பாலக்கோடு BSNLEU சங்கத்தின் மே தின சிறப்பு கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் BSNLEU சங்கத்தின் மாநில உதவி செயலாளர் M. நாராயணசாமி, மாவட்ட செயலாளர் S . அழகிரிசாமி, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் BSNLEU ன் 25 தோழர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டம் நடப்பதை பிடிக்காத SDE (G) பாலக்கோடு கூட்டத்தை கலைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்தார். அதை கண்டுகொள்ளாமல் கூட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் வெளியே சென்று செக்யூரிட்டியை போனில் அழைத்து தொலைபேசி நிலையத்தின் மெயின் கேட்யை பூட்டிவிட்டு சென்று விடுமாறு ஆணை இட்டார் . அவரின் ஆணைப்படி செக்யூரிட்டி கேட்யை பூட்டி சென்று விட்டார் . ஆதலால் உள்ளிருந்த அனைவரும் மிகந்த சிரமத்துக்கு தள்ளப்பட்டனர். இதை அறிந்த பத்திரிக்கை , தொலைகாட்சி நிருபர்கள் வந்து SDE ன் போக்கை கண்டித்தனர். பிறகு காவல் துறையின் உதவினால் கேட் திறக்கப்பட்ட பின்பு அனைவரும் இரவு 09:30 மணியளவில் வெளியேறினர்.