BSNLEU மற்றும் TNTCWU இணைந்த மாவட்ட செயற்குழு 17.11.2014 அன்று நமது மாவட்ட தலைவர் திரு D. பாஸ்கரன் தலைமையில் தர்மபுரி E10 B தொலைபேசி நிலையத்தில் உள்ள மன மகிழ் மன்றத்தில் நடைபெற்றது . இந்த கூட்டதில் வருகிற 27.11.2014 அன்று அனைத்து (J A C) சங்கங்களையும் ஒன்றிணைத்து நடக்க இருக்கின்ற ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது குறித்தும் மற்றும் பல்வேறு தலைமட்ட பிரச்சனைகளை பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் மாநில அமைப்பு செயலர் தோழர் பாபு மற்றும் முன்னால் மாநில உதவி செயலர் தோழர் நாராயணசாமி அவர்கள் உரையாற்றினர்.