நமது மாவட்டத்தில், TRANSMISSION பிரிவில் பணிபுரிந்த தோழர்கள், 02.09.2017 அன்று இலாக்கா பணிக்காக சென்றபோது, அவர்களின் வாகனம் விபத்துக்குள்ளாகியது. சம்பவ இடத்திலேயே, இரண்டு தோழர்கள் உயிர் நீத்தனர். மேலும் நான்கு தோழர்கள் படு காயம் அடைந்தனர்.
இறந்த இரண்டு தோழர்களில் ஒருவர், தோழர் M . ஜீவா, இரண்டு மாதத்திற்கு முன்பு, நேரடி நியமன Junior Engineer ஆக, BSNLல் பணியில் சேர்ந்தவர். மற்றுமொரு தோழர், 20 ஆண்டுகளாக BSNL நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணி புரிந்து வந்த தோழர் T . கஜேந்திரன்.
இதில் கொடுமை, இரண்டு தோழர்களின் குடும்பமும், சாதாரண நடுத்தர, ஏழை குடும்பங்கள். தோழர் ஜீவா திருமணம் ஆகாதவர். அவர் குடும்பத்தின் ஒரே மகன். திருமணமாகாத தங்கை மற்றுமொரு வாரிசு. பன்னாட்டு நிறுவனத்தில், சென்னையில், நல்ல சம்பளத்தில் பணியில் இருந்து, அதை ராஜினாமா செய்துவிட்டு, BSNL பணியில் சேர்ந்தவர்.
ஒப்பந்த தொழிலாளி, தோழர் கஜேந்திரன் திருமணமானவர். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தை. திருமதி கஜேந்திரன் மூன்றாவது குழந்தையின் கர்ப்பத்தை சுமந்து இருப்பது, கூடுதல் தகவல். விவசாய கூலி தொழிலாளி குடும்பத்தில் இருந்து வந்தவர்.
இரண்டு தோழர்களின் குடும்பங்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் இல்லை என்பது தற்போது உள்ள விதி. EPF திட்டத்தில் உள்ள மிகச்சொற்பக் குடும்ப ஓய்வூதியமே கிடைக்கும். BSNL நியமன ஊழியர்களுக்கு இன்னும் ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை. அகால மரணம் அடையக்கூடிய ஊழியர்களுக்கு புதிய நலத்திட்டம் அமுல்படுத்தப்படுவதும் பரிசீலனையில்தான் உள்ளது. பணியில் இருக்கும் போது உயிர் நீக்கும் ஒப்பந்த ஊழியர்களின் நிலை இன்னும் கொடுமையானது.
இதையெல்லாம் கணக்கில் கொண்டு, சங்க வித்தியாசமின்றி, அதிகாரி, ஊழியர் பேதமின்றி, அனைவரும் ஒன்று சேர்ந்து தோழர்களின் குடும்பங்களுக்கு உதவுவது என முடிவு எடுத்துள்ளோம். நிவாரண நிதி வசூல் செய்ய, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. "தோழர்கள் ஜீவா மற்றும் கஜேந்திரன் குடும்ப நிவாரண நிதி" என பெயரிடப்பட்டுள்ள அக்குழுவின் தலைவராக, தர்மபுரி மாவட்ட பொது மேலாளர் அவர்களும், செயலராக DGM (HR/Admn) அவர்களும், பொருளாராக DGM (Finance) அவர்களும் செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிதி வழங்க ஏதுவாக, DGM (HR/Admn) மற்றும் DGM (Finance) பெயரில் இணைந்த வங்கி கணக்கு தர்மபுரி கனரா வங்கியில் துவங்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு எண்:1271101039834
IFSC Code: CNRB0001271
எங்களது இந்த பணிக்கு ஆதரவாக, நீங்களும் ஆதரவு கரம் நீட்டுங்கள் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். BSNLக்காக உழைத்து உயிர் நீத்த தோழர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது நம்
ஓவ்வொருவரின் கடமை, என்ற பார்வையில் தாராளமாக நிதி உதவி வழங்குங்கள் என அன்போடும், பண்போடும் கோருகிறோம். மாநிலம் தழுவிய அளவில், இதற்காக ஒரு நிதி திரட்டப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவியதாக நாளை வரலாறு கூறட்டும் என்பது எங்களின் நோக்கம்.
தோழமையுடன்,
நிவாரண நிதி குழு, தர்மபுரி
நிதி உதவி கோரும் நிர்வாக கடிதம் காண இங்கே சொடுக்கவும்
வங்கி விவரம் காண இங்கே சொடுக்கவும்