தற்போது, ஏற்பட்டுள்ள கால மாற்றத்திற்கேற்ப, BSNL ஊழியர்களின் சேவை சிம் திட்டத்தை ரூ.429 திட்டத்திற்கு மாற்ற வேண்டும் என நமது சங்கம் கோரிக்கை வைத்தது.
இன்று, 13.11.2017 நடைபெற்ற 35வது தேசிய கவுன்சில் கூட்டத்தில், இந்த கோரிக்கையை நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ வலியுறுத்தினார். தோழரின் வாதத்தையும், விளக்கத்தையும் புரிந்து கொண்ட மனித வள இயக்குனர் திருமதி. சுஜாதா ராய் கோரிக்கையை ஏற்று கொண்டார். விரைவில் உத்தரவு வெளியாகும்.
ரூ. 429 திட்டப்படி 90 நாட்களுக்கு அனைத்து அழைப்புகளும், டேட்டாவும் முற்றிலும் இலவசம். தற்போது ரூ. 200 வழங்கப்படுவதுற்கு பதில், ரூ. 429 மூன்று மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும்.
ஊழியருக்கு பலன் தரக்கூடிய இந்த கோரிக்கையை எழுப்பி, வெற்றி கண்ட BSNLEU மத்திய சங்கத்திற்கு பாராட்டுக்கள்.
வாழ்த்துக்களுடன்,
P . கிருஷ்ணன் ,
மாவட்ட செயலர்